கலவை-திமிரி செல்லும் சாலையில் கலவை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது கலவை-திமிரி சாலையில் வாகனங்கள் செல்வதால் மருத்துவமனையில் வரும் நோயாளிகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அரசு மருத்துவமனை அருகே 2 வேகத்தடை அமைக்குமாறு நெடுஞ்சாலைத் துறையை கேட்டுக் கொள்கிறோம்.
-உமா, சமூக ஆர்வலர், கலவை.