ரவுண்டானா அமைக்க வேண்டும்

Update: 2022-09-14 15:34 GMT

ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வண்டிமேட்டுத்தெரு, எம்.எப்.ரோடு ஆகிய சாலைகள் சந்திக்கும் 4 முனை சாலை சந்திப்பு இருக்கிறது. சென்னை - சித்தூர் சாலையில், நவல்பூர் அருகே மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால், அனைத்துப் பஸ்களும், இந்த 4 முனை சாலை சந்திப்பு வழியாகத்தான் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் 4 முனை சந்திப்பை கடப்பதற்கு நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த கஷ்டப்படுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே இந்த 4 முனை சாலை சந்திப்பின் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். அல்லது இந்த 4 முனை சாலை சந்திப்பில் ரவுண்டானா ஏற்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

- கே.ஜோதிநாதன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்