வேலூர் நேதாஜி ஸ்டேடியம் அருகில் இருந்து கஸ்பா செல்லும் வழியில் வசந்தபுரம் புளியந்தோப்பு பகுதி உள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய் மீது தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள பாலம் சேதம் அடைந்து, பள்ளமாக உள்ளது. பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாலசந்தர், வேலூர்.