நாட்டறம்பள்ளி அடுத்த டோல்கேட் என்ற இடத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூரை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் ஆபத்தான நிலையில் சாலையை கடக்கின்றனர். அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகி உள்ளன. அப்பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.