வாலாஜா தாலுகா பூட்டுத்தாக்கு, அம்முண்டி, திருவலம் செல்லும் சாலையில் பூட்டுத்தாக்கு-அம்முண்டி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. அங்கு 300 மீட்டர் நீளத்துக்கு பாலாற்றில் மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும். மழைக்காலங்களில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, பாலாற்றைக் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பூட்டுத்தாக்கு-அம்முண்டி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும்.
-டி.சிவலிங்கம், வி.சி.மோட்டூர்.