வாலாஜா காளிகாம்பாள் கோவில் தெருவில் கோர்ட்டு உள்ளது. இந்தத் தெருவின் நான்கு முனை சந்திப்பு பகுதியில் ஒரு பள்ளம் உள்ளது. இது, சாலையின் நடுவே பல மாதங்களாக இருப்பது தெரியாமல் இரவிலும், மழைக்காலத்திலும் அந்த வழியாக வருவோர் பள்ளத்தில் விழும் அவலம் நடந்து வருகிறது. வாலாஜா நகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடி சாலையை சமன் செய்ய வேண்டும்.
-வீராசாமி, வாலாஜா.