ஆற்றை ஆக்கிரமித்து போடப்பட்ட மண் ரோடு

Update: 2025-02-02 19:38 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சத்திய விஜய நகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுபான்ராவ்பேட்டை கிராமத்தில் கமண்டல நாக நதி ஓடுகிறது. அந்த ஆற்றின் குறுக்கே முக்கால் பாகத்தை ஆக்கிரமித்து மண் ரோடு போடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் ஓட்டம் தடைபடுகிறது. கமண்டல நாக நதியை ஆக்கிரமித்துப் போடப்பட்ட மண் ரோட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

-ராகவன், ஆரணி.

மேலும் செய்திகள்