சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Update: 2023-06-25 13:48 GMT

ஆரணி சைதாப்பேட்டை அண்ணா நகர் எதிரே நேரு நகர் உள்ளது. அந்தப் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய் வால்வின் மேல்பகுதி சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. அந்த வழியாக நடந்து ெசல்லும் சிறுவர், சிறுமிகள், முதியோர் குழியில் தவறி விழும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழிக்கு மூடி போட வேண்டும்.

-கோவிந்தராஜ், ஆரணி.

மேலும் செய்திகள்