திருப்பத்தூர் அண்ணா நகரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. அந்தப் பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.