சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குறுகியதாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலை சீரமைக்க சோளிங்கர் நகருக்குள் சென்று வர ஒரு வழிச் சாலையாக மாற்றி முக்கிய இடங்களில் போலீசார் தடுப்பு வேலி (பேரிகாட்) வைத்தனர். அதில் தபால் அலுவலக தெருமுனையில் வைத்திருந்த தடுப்பு வேலி மீது யாரோ வாகனத்தை விட்டு மோதி உடைத்துள்ளனர். பின்னர் அதை, ஓரமாக வீசி விட்டு சென்றுள்ளனர். சேதம் அடைந்த இரும்புத் தடுப்பு வேலியை சரி செய்து வைப்பார்களா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.