வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு காட்பாடி திருநகர் பகுதிக்கு உட்பட்ட எஸ்.ஏ.நகர் விவேகானந்தா சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைப் பெய்தால் தண்ணீர் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது. எங்கள் பகுதி சாலையை சீர் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பத்மினி, காட்பாடி.