அணைக்கட்டு ஒன்றியம் ஒதியத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபுரம் கிராமத்துக்கு செல்ல தாங்கல் பகுதியில் இருந்து 440 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்க 5 மாதத்துக்கு முன்னால் தார் சாலையை கிளறி விட்டனர். ஆனால் இன்னும் சாலை பணியை தொடங்கவில்லை. அந்த வழியாக செல்வோரின் கால்களையும், டயர்களையும் ஜல்லிகள் பதம் பார்க்கின்றன. அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.
-சந்திரமோகன், அணைக்கட்டு.