வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் கான்கிரீட் சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் கான்கிரீட் சிலாப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.