சென்னை கொட்டிவாக்கம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட எம். ஜி. ஆா் நகர், புரட்சித்தலைவி 12வது தெருவின் முகப்பு பகுதியில் உள்ள பாதை உடைந்து ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. இருசக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்லும்போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், சாலையில் பள்ளமான பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் இந்த பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.