சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் சாலையானது குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் சாலைவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையிலேயே தேங்கிய வாறும் உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. சாலையை சரி செய்யவும், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?