நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மேலவீதி பகுதி உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அவதியடைந்து வருகின்றனர். தேங்கும் மழைநீர் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை சீரமைத்து தருவதோடு, இனிமேல் சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.