குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-30 14:00 GMT
நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் அந்தோணியார் கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தான் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமமைத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்