வேகத்தடை முறையாக அமைக்கப்படுமா?

Update: 2022-07-29 14:34 GMT

பவானி-மேட்டூர் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த வேகத்தடை உயரம் குறைவாக இருப்பதுடன் முறையாகவும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேகத்தடை முறையாக அமைப்பதுடன் அதன் மீது ஓளிரும் தன்மை கொண்ட பெயிண்டு அடிக்க வேண்டும். மேலும் அதன் அருகில் வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்