குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சாலையோர பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?