சேலம் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட தமிழ்சங்கம் சாலை சேதமடைந்து காணப்பட்டதால் அந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சாலையின் ஒரு புறத்தில் மட்டும் பள்ளம் தோண்டப்பட்டு அங்கு ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் இந்த சாலை புதுப்பிக்கப்படாமல் ஜல்லி கற்கல் கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் தமிழ்ச்சங்கம் சாலை வழியாகத்தான் பழைய பஸ் நிலையத்திற்கு செல்கின்றன. ஆனால் தற்போது இங்கு சாலை பணிகள் நடப்பதால் அனைத்து பஸ்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.