நாகர்கோவில் மாநகராட்சியில் வாத்தியார்விளை சந்திப்பில் இருந்து கிருஷ்ணன்கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சில மாதங்களுக்கு முன் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பின் மூடப்பட்டது. ஆனால், சாலை முறையாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அலங்கார தரைகற்கள் பதிப்பதற்காக சாலையோரத்தில் கற்கள் மற்றும் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை பணிகள் நடைபெறவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-விபின், வாத்தியார்விளை.