பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து அமரபூண்டி கிராமம் செல்லும் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் இரு கிராம மக்களும் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.