மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கோல் நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் இந்த சாலையை கடக்கும் போது இந்த நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் தினமும் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகிறார்கள். பெரும் உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் செங்கோல் நகர் சந்திப்பு முன்பு வேகத்தடை அமைத்திட சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.