நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட நேசமணிநகர் பகுதியில் நெசவாளர் காலனி உள்ளது. இந்த காலனிக்கு செல்லும் சாலையில் தொடக்கத்தில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது. பின்னர், சாலை பணி முடிந்தும் முறையாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மழைநீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.