நாகா்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தளவாய்புரத்தில் ஜார்ஜியார் தெரு உள்ளது. இந்த தெருவில் பொது பாதையை ஆக்கிரமித்து சாய்வுதளம் அமைத்துள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.அந்தோணி, தளவாய்புரம்.