சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

Update: 2022-10-05 16:21 GMT

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் இருந்து சாந்தபிள்ளை கேட் செல்லும் சாலை உள்ளது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஆபத்தான பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்