சாலையில் உள்ள அபாய பள்ளம்

Update: 2022-10-05 16:12 GMT

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணாசாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான பஸ்கள், கார்கள், சென்று வருகின்றன. மேலும் மார்க்கெட்டிற்கு செல்லும் கனரக வாகனங்களும் இந்த சாலையின் வழியாக சென்று வருகின்றன. இந்த சாலையில் காந்தி சாலை இணையும் இடத்தின் அருகே உள்ள பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டி மூடி உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் அபாய பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த பள்ளத்தில் அந்த வழியா செல்பவர்கள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்