சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2022-09-27 15:56 GMT

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மாரநேரி கிராமத்தில் இருந்து தொண்டராயன்பாடி,அய்யனாபுரம் வழியாக பூதலூர் வரை செல்ல ஆனந்த காவேரி கரையில் தார் சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் மாரநேரி சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளங்களால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் உள்ள பள்ளங்களை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்