திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. இதற்கான சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ளது. குழாய் பதிக்க சாலையை தோண்டுவது தவிர்க்க முடியாதது. ஆனால் தோண்டிய பிறகு குழாய் பதிக்க தாமதம் ஆனால் இரவு நேரத்தில் பிரதிபலிப்பான் அமைத்து வாகன ஓட்டிகளின் உயிரை காக்கலாமே. பகல் நேரத்தில் அந்த குழியை சுற்றி, சிவப்பு நிற ரிப்பனை கட்டினால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் செல்லும் போது எச்சரிக்கையுடனுடம், கவனமுடனும் செல்வார்கள் அல்லவா?