சென்னை அயப்பாக்கம் மாருதி நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து மோசமக காட்சி தருகிறது. இந்த சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி அசுத்தமாக காட்சி தருகிறது. இதனால் இந்த சாலையில் வாகனத்தில் பயணம் செய்பவர்களும், நடந்து செல்பவர்களும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா?