வேகத்தடை அவசியம்

Update: 2022-08-20 12:21 GMT

சேலத்தில் இருந்து அரூர் செல்லும் வழியில் அயோத்தியாப்பட்டணத்தில் ராமர் கோவில் அமைந்துள்ளது. இங்கு அரூர் மற்றும் பேளூர் செல்வதற்கு சாலை பிரிகிறது. இங்கு விபத்து நடப்பதற்கு உண்டான வாய்ப்புகள் மிக அதிகம். இந்தநிலையில் பேளூர் சாலையில் மட்டும் வேகத்தடை அமைந்துள்ளது. ஆனால் அரூர் செல்லும் சாலையில் வேகத்தடை இல்லை. சில ஆண்டுகள் முன்பாக இங்கு வேகத்தடை அமைந்திருந்தது. சில காரணங்களுக்காக அது தற்காலிகமாக அகற்றப்பட்டது. இப்பொழுது போக்குவரத்து மிக அதிகமாக இருப்பதினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் அந்த பகுதியில் வேகத்தடை அவசியம் என்பதை உணர்ந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்