தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பேடறஅள்ளி ஊராட்சி வைத்தியர்நகர் முதல் பேடறஅள்ளி கிராமம் வரை புதிய தார் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. இந்த பணி கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே கிடப்பில் போடப்பட்ட தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-சந்தோஷ், பேடறஅள்ளி, தர்மபுரி.