சென்னை அம்பத்தூர் ஒரகடம் கணபதி நகர் அய்யா கோவில் அருகே இருக்கும் சாலையில் உள்ள வேகத்தடை ஆபத்தாக காட்சி தருகிறது. சாலையை விட சற்று உயரமான நிலையில் இந்த வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பதால் அடிக்கடி வாகன ஓட்டிகள் தடுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். இரவு நேரத்தில் விபத்து நடக்கும் பகுதியாகவே இந்த இடம் மாறி வருகிறது. எனவே இந்த பிரச்சினையை விரைந்து சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.