வாகன தணிக்கை

Update: 2022-08-19 13:57 GMT
நாமக்கல் புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாத்தையங்கார்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து புதுச்சத்திரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும்ஏராளமான இரு மற்றும் 4 சக்கர வாகனங்கள் எதிர்திசையில் இயக்கப்படுகின்றன. குறிப்பாக காலை,மாலை நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் அவ்வாறு தவறான திசையில் பயணிக்கின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சரியான திசையில் பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே எதிர் திசையில் வரும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீசார் அந்த வழியாக வரும் வாகனங்களை தணிக்கை செய்ய வேண்டும். தவறான திசையில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்