நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. அங்கிருந்து நாமக்கல் நகருக்குள் செல்லும் சாலை உள்ளது. அதற்காக அந்த சாலையின் நுழைவாயிலில் வேகத்தடை உள்ளது. அந்த வேகத்தடைக்கு முன்பு சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே அங்கு பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.