சின்னசேலம் நகரில் புதிய பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாலை பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.