நாகர்கோவில் கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை எப்போதும் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது, சாலை சேதமடைந்து பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து சேதமடைந்த சாலையையும் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.