சென்னை, கொளத்தூர் மாதனாங்குப்பம் பெண்கள் கல்லூரி அருகே 4 முனை சந்திப்பில், மழை நீர் வடிகால்வாய் பணி நடந்த போது ஏற்பட்ட பள்ளம் மூடப்படாமலே உள்ளது. கடந்த 3 மாதங்களாக இதே நிலையில் இருக்கும் இந்த பள்ளத்தில் கடந்த வாரம் தெருநாய் ஒன்று விழுந்து இறந்துவிட்டது. தினமும் அதிகமான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு இந்த பள்ளத்தை மூட வேண்டும்.