சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள நடைபாதை சேதமடைந்தும் உடைந்தும் காணப்படுகிறது. இந்த நடைபாதையில் சில இடங்களில் பள்ளமாக காட்சி தருவதால், வயதானவர்கள் சில சமயங்களில் தடுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். அருகிலேயே சாலை இருப்பதால் இரவு நேரங்களில் இந்த நடைபாதை பயணம் ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. எனவே விரைவில் சேதமடைந்திருக்கும் நடைபாதையை சரி செய்ய வேண்டுகிறோம்.