தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா சிட்லிங் ஊராட்சி ஒன்றியம் நாய்குத்தி கிராமத்தையும், சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியை இணைக்கும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழேவிழுந்து காயம் அடைகின்றனர். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், சிட்லிங், தர்மபுரி.