சென்னை விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் உள்ள சாலை ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை தற்காழிகமாக சிமெண்ட் தடுப்புகள் ஏற்படுத்தி மூடி வைத்துள்ளனர். ஆனாலும் அது முழுவதுமாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவில் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் தடுக்கி விழுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்த பள்ளத்தை மூடுவதற்கு நிரந்தரமாக வழி செய்ய வேண்டும்.