சென்னை வேப்பேரி ஹன்டர்ஸ் ரோட்டில் உள்ள பிரபல மருத்துவமனை அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலை ஓரத்திலும், நடைபாதையிலும் வாகனங்கள் நிறுத்தவைக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட நாட்களாகவே இந்த வாகனங்கள் சாலையில் நிறுத்தவைக்கப்பட்டிருப்பதால், இந்த சாலையில் இரண்டு பக்கமும் வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பணிக்கு செல்லும் மக்கள் நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொளள்கிறோம்.