சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ல ஏ.ஜே. பிளாக் 10-வது தெருவில் உள்ள சாலை மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இரவில் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகிறது. விபத்துக்களை தடுப்பதற்கு உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.