தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கரகதஹள்ளி ஊராட்சி பூர்காலன்கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விவசாயிகள் வாகன ஓட்டிகள் என தினந்தோறும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும்.
- கண்ணன், தர்மபுரி.