சென்னை அண்ணா சாலை ஜி.பி.சாலையில் உள்ள நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே நடைபாதை நடப்பதற்கே என்று எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது சட்டப்படி குற்றம் என தெரிந்தும் வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தடுக்கப்படுமா?