
நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சியில், மெயின் சாலையில் அரசினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசினர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளின் எதிரில் உள்ள சாலை பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவுகளில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் சாலையை கடந்து செல்வதற்கு பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்துகள் எற்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. எனவே, பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி அந்த இடத்தில் வேகத்தடை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- பொதுமக்கள், ஆழியூர்