நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் சத்திரத்திலிருந்து வடகாலத்தூர் ஊராட்சி வரை செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் தினமும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- பொதுமக்கள், வடகாலத்தூர்