சாலைவசதி வேண்டும்.

Update: 2022-08-15 13:54 GMT

நீடாமங்கலம் பாப்பையந்தோப்பு பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியில் எராளமான வீடுகள் உள்ளன. இந்த நகருக்குள் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவிகள்,வாகன ஓட்டிகள் அந்த சாலையை மிகுந்த சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர் . எனவே, இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி புதிய தார்ச்சாலை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

- பொதுமக்கள், நீடாமங்கலம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது