சென்னை திருவல்லிக்கேணி காசிம் அலி 2-வது தெரு நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் மழைநீர் வடிகால்வாய் தூர்வாராத காரணத்தினால் குப்பைகளால் நிரம்பியுள்ளது. இதனால் மழை நீர் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் இந்த வடிகால்வாயின் மூடி தூக்கியபடி இருப்பதால் வாகனத்தில் செல்பவர்கள் தடுக்கி கீழே விழும் சம்பவங்களும் ஏற்படுகிறது. மழை நீர் வடிகால்வாய் தூர்வாரப்படுமா?