குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-13 16:12 GMT

ஓசூர் லட்சுமிதேவி நகரில் இருந்து பிருந்தாவன் நகர் வரை செல்லும் சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது. பாகலூர் ஹட்கோ, என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஸ்ரீநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஓசூர் தர்கா பகுதியை சென்றடைய அந்த சாலை எளிதாக இருப்பதால் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே லட்சுமி தேவி நகர்-பிருந்தாவன் நகர் சாலையை விரிவாக்கம் செய்வதுடன், குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா?

-முத்துச்சாமி, ஓசூர்.

மேலும் செய்திகள்